போக்குவரத்து போலீஸ்காரர் மீது தாக்குதல்
கடலூரில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்
கடலூர் தேவனாம்பட்டினம் மேட்டு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மகன் குகன் (வயது 31). கடலூர் போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் கடலூர் மணிக்கூண்டு வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வில்வநகரை சேர்ந்த ரைட்சுரேஷ், பன்னீர் உள்பட 3 பேர் சவ ஊர்வலத்தில் ரோட்டை மறித்தபடி ஆடிக்கொண்டு சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த குகன் அவர்களை ஓரமாக போகுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் குகனை தாக்கி கத்தியால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் காயமடைந்த குகன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து குகன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story