கள்ளக்காதலியை தாக்கிய தொழிலாளி கால் உடைப்பு


கள்ளக்காதலியை தாக்கிய தொழிலாளி கால் உடைப்பு
x

கயத்தாறு அருகே தகாத உறவை துண்டிக்க கூறிய கள்ளக்காதலியை தாக்கிய தொழிலாளிைய தாக்கி காலை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே தகாத உறவை துண்டிக்க கூறிய கள்ளக்காதலியை தாக்கிய தொழிலாளிைய தாக்கி காலை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

கயத்தாறு அருகே இளவேலங்கால் கிராமத்தில் தெற்கு காலனியில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் மதன்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. அதே பகுதி தெற்கு காலனியை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் கண்ணன்(37). இவர் கடம்பூரிலுள்ள மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள்.

கள்ளத்தொடர்பு

இவருக்கும், மதன்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு மதன்குமாரை கண்ணன் கண்டித்துள்ளார். ஆனாலும், காளியம்மாளுடனான தொடர்பை மதன்குமார் துண்டித்து கொள்ளவில்லை. கண்ணன் வேலைக்கு சென்றவுடன் காளியம்மாள் வீட்டுக்கு மதன்குமார் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

இதனால் கண்ணனுக்கும், காளியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் கண்ணன் வேலைக்கு சென்றவுடன் மதன்குமார் வீட்டுக்கு காளியம்மாள் ெசன்றுள்ளார்.

அங்கிருந்த மதன்குமாரிடம் இனிமேல் என்வீட்டுக்கு நீ வரவேண்டாம், குடும்பத்தில் பிரச்சினையாக இருக்கிறது என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் காளியம்மாளை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த காளியம்மாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அன்று மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய கண்ணனிடம், காளியம்மாள் ஆஸ்பத்திரியில் இருப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

தொழிலாளி கால் உடைப்பு

அங்கு ெசன்று காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மனைவியை பார்த்த கண்ணன் ஆத்திரத்துடன் மதன்குமாரை தேடியுள்ளார்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், நேற்று முன்தினம் இரவு மதன்குமார் அவரது வீட்டு மொட்டைமாடியில் இருப்பதை அறிந்த கண்ணன் அங்கு இரும்பு கம்பியுடன் சென்றுள்ளார். அங்கு படுத்து இருந்த மதன்குமாரை உருட்டு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவரது கால் உடைந்துள்ளது. மேலும், அவரை சரமாரியாக கம்பியால் தாக்கியதில் மதன்குமார் பலத்த காயமடைந்துள்ளார்.

கணவர் கைது

ரத்த வெள்ளத்தில் கிடந்த மதன்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story