பள்ளி மாணவனை தாக்கியவர் கைது


பள்ளி மாணவனை தாக்கியவர் கைது
x

பள்ளி மாணவனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு ஆயுதகளம் கிராமம் வடக்கு பந்தக் கோட்டை தெருவை சேர்ந்தவர் மேகலா மகன் ரமணா(வயது 10). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மேகலாவிற்கும், பாலசுப்பிரமணியன் மகன் ராஜ்மோகன்(32) என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேகலாவின் மகன் ரமணா படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளிக்கு ராஜ்மோகன் நேரடியாக சென்று ரமணாவை அடித்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story