காவலாளியை தாக்கி பணம் பறிப்பு


காவலாளியை தாக்கி பணம் பறிப்பு
x

வடக்கன்குளம் அருகே காவலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த புதுமனையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 48). இவர், கொத்தங்குளம் டாஸ்மாக் கடையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாடு பகுதியை சார்ந்த மணி மகன் வேல்முருகன் (36), அவருடைய நண்பரான லீபுரத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ராஜசேகரை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.5,500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.5,500 மற்றும் செல்போனை மீட்டனர். தலைமறைவான வைகுண்டராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான வேல்முருகன் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story