மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கையிடம் மத்திய அரசு பேச வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு - இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Related Tags :
Next Story