அத்தாணிஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு
அத்தாணி ஆற்றில் மூழ்கி மூதாட்டி இறந்தாா்.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்கா தேவி (வயது 74) இவர் தனியாக வசித்து வந்தார். கங்காதேவி நேற்று காலை அத்தாணி பவானி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக சென்றவர் பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அங்கு தேடிச்சென்று பார்த்தனர்.
அப்போது கங்காதேவியின் உடல் ஆற்றில் கீழ்வானி என்ற பகுதியில் உள்ள பாறை இடுக்குக்குள் கிடந்தது. ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கங்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story