கோவில் மரங்களை வெட்டி விற்க முயற்சி; அதிகாரி ஆய்வு


கோவில் மரங்களை வெட்டி விற்க முயற்சி; அதிகாரி ஆய்வு
x

கோவிலுக்கு சொந்தமான மரங்களை வெட்டி விற்க முயற்சி நடைபெற்றதையடுத்து, அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேலூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வெட்டி தனியாருக்கு விற்க திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள், இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தனி தாசில்தார் பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வெட்டப்பட்டிருந்த 5 டன் எடையுள்ள மரங்களை கைப்பற்றினார். மேலும் அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.


Next Story