ஏமாற்றும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்
ஓசூர் -ஜோலார்ப்பேட்டை ரெயில்வே திட்ட அறிக்கை தொடர்பாக மக்களை ஏமாற்றும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ஓசூரில் செல்லகுமார் எம்.பி. கூறினார்.
ஓசூர்
ஓசூரில் செல்லகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓசூர் -ஜோலார்ப்பேட்டை ரெயில்வே திட்ட அறிக்கைஓசூர் -ஜோலார்ப்பேட்டை ரெயில்வே திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இதுதொடர்பாக அறிக்கை தயாரித்து அளித்தபின், லாபத்துடன் இயங்கும் ரெயில்பாதை என ரெயில்வே வாரியம் ஒப்புக்கொண்டது. இதுகுறித்து ஹோஸ்டியா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுடன் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ரூ.1,496 கோடி செலவு ஆகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்திற்கு 1,900 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மத்திய ரெயில்வே வாரியம் ரூ.2.47 கோடி திட்ட அறிக்கை தயார் செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில் 3 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. அடுத்த வாரம்தான் எந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரிக்கும் என்பதே தெரிய வரும். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ரெயில்வே மந்திரி ஒப்புக் கொண்டதாகவும், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து விட்டது என்றும் பா.ஜ..க.வினர் கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. ஓசூர்-ஜோலார்ப்பேட்டை ரெயில்வே திட்டம் தொடர்போக மக்களை ஏமாற்றும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்.
அப்போது, மேற்கு காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், மாவட்ட பொருளாளர் மகாதேவன், கீர்த்தி கணேஷ், மாநகர தலைவர் தியாகராஜ், உள்பட பலர் உடன் இருந்தனர்.