போலி அடையாள அட்டையுடன் பொதுக்குழுவில் நுழைய முயற்சி - திடீர் பரபரப்பு...!


போலி அடையாள அட்டையுடன் பொதுக்குழுவில் நுழைய முயற்சி - திடீர் பரபரப்பு...!
x

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயற்சி செய்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டதில் கலந்து கொள்ள போலி அடையாள அட்டையுடன் பலர் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் 2,500 பேர் பங்கேற்பதாக கூறியிருந்து நிலையில் சிலர் போலி அடையாள அட்டையுடன் வந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது. இதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story