சூளகிரியில்போலி சங்கிலியை காட்டி பணம் பறிக்க முயற்சிபெண் உள்பட 3 பேர் கைது
சூளகிரி
சூளகிரியில் போலி சங்கிலியை காட்டி பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை அடகு கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுராம் (வயது30). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஆன்லைன் டிக்கெட் பதிவு மையத்தை நடத்தி வருகிறார். மேலும் இவர் நகை அடகு கடையும் வைத்துள்ளார். கடந்த வாரம் இவரது கடைக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (35), கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த கங்காராம் என்பவரது மனைவி மீனா (35) மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ் (35) ஆகிய 3 பேரும் வந்தனர்.
அவர்கள் கால் பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை கொடுத்து இது போல் தங்களிடம் நிறைய இருப்பதாகவும், நீங்கள் விரும்பினால் குறைந்த விலைக்கு தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த சங்கிலியை ரகுராம் வாங்கி சோதனை செய்தார். அப்போது அது போலி சங்கிலி என்று தெரியவந்தது.
3 பேர் கைது
சம்பவத்தன்று 3 பேரும் மீண்டும் ரகுராம் கடைக்கு வந்து 2 கிலோ அளவிலான நகைகளை காண்பித்து பணம் பறிக்க முயன்றனர். ரகுராம் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார்அவர்கள் 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்.