இந்தியாவை மதவெறிகொண்ட நாடாக மாற்ற முயற்சி
இந்தியாவை மதவெறிகொண்ட நாடாக மாற்ற முயற்சி
அவினாசி
அக்னிபத் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்த்து இந்தியாவை மதவெறி கொண்ட நாடாக மாற்ற முயற்சி நடக்கிறது என்று ஆ.ராசா எம்.பி. கூறினார்.
வணிக வளாகம்
அவினாசி போலீஸ் நிலையம் அருகில் வணிகவளாகம் அமைப்பதற்கு பூமிபூஜை நடந்தது. விழாவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த வணிக வளாகம் ரூ. 6 கோடியில் கட்டப்பட உள்ளது. இதில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் இஸ்மாயில் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அக்னி பாத்திட்டத்தின் ஒரு முகம்தான் மக்களுக்கு தெரிந்துள்ளது. கோரமுகம் வேறுவிதமானது. அதன் நோக்கும் 5 அல்லது 10 ஆண்டுகாலத்தில் இந்த நாட்டை மதசார்பற்ற நாடு என்பதை மாற்றி மதசார்புள்ள நாடாக மாற்றும் முயற்சியாகும். இந்த நாட்டில் ஒரே ஒரு மதம்தான் இருக்கும். அந்த மதத்தை காப்பாற்ற வேண்டிய ஆயுத பயிற்சியை அரசு ராணுவத்தின் மூலமாக படிப்படியாக தந்து அவர்களை 4½ ஆண்டுகாலத்தில் வெளியே கொண்டுவருவார்கள். பின்னர் அவர்களை ஆர்.எஸ்.எஸ்.அல்லது பா.ஜனதாவில் சேர்த்து இதை இந்து நாடாக மதவெறிகொண்ட நாடாக மாற்றுகிற முயற்சி உள்ளே இருக்கிறது என்கிற அய்யப்பாடு வளர்ந்திருக்கிறது. அது விரைவில் வெளிவரும். அதை முறியடிக்க கூடிய அனைத்து ஆற்றலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. விரைவில் அது பற்றி நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட நிலைப்பாடு எடுப்போம் என்பதை முதல்வர் அறிவுறுத்துவார்.
சர்வதேச அளவில் கச்சா என்னை விலை எவ்வளவு? மற்ற நாடுகளில் என்ன விலை? இந்தியாவில் என்ன விலை? என்பதை இணைய தளத்தில் தேடிப்பார்த்தால் பிரதமர் மோடி, மந்திரி நிர்மலா சீதாராமன் சொன்ன பொய்கள் அம்பலமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலெக்டர் .வினீத், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், அவினாசி ஒன்றிய செயலாளர் ஈ.பசிவப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, அவினாசி நகர செயலாளர் கே.சி.பொன்னுசாமி, பேருராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
---
3 காலம்
அவினாசியில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்திற்கு ஆ.ராசா எம்.பி. அடிக்கல் நட்டியபோது எடுத்த படம். அருகில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் வினீத் ஆகியோர் உள்ளனர்.