பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் தீக்குளிக்க முயன்றார்.
சேலம்
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி (வயது 40). இவரது கணவர் வெங்கடாஜலபதி (50). இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வெங்கடாஜலபதி, கையில் பெட்ரோல் கேனுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story