கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை முயற்சி


கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 23 Nov 2022 7:30 PM GMT (Updated: 2022-11-24T01:00:29+05:30)

பாப்பிரெட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:-

பொம்மிடி அருகே பில்பருத்தியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 47). இவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா பனகஹள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் தர்மபுரியில் வசித்து வருகிறார்‌ .இவரது வீடு பில்பருத்தி விவசாய தோட்டத்தில் உள்ளது. இந்த வீட்டின் பின்பக்க கதவை மர்மநபர்கள் உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த அலமாரிகளை உடைத்து பணம், நகையை தேடி உள்ளனர். எதுவும் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இதுகுறித்து அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story