திங்கள்சந்தையில் மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி


திங்கள்சந்தையில் மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 1 May 2023 12:45 AM IST (Updated: 1 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தையில் மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தையில் மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மளிகை கடை

திங்கள்சந்தை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 54). இவர் திங்கள்சந்தை காமராஜர் வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை முயற்சி

உடனே கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அதே சமயம் பணம் வைக்கும் பெட்டியும் திறந்து கிடந்தது. அதில் இரவில் பணம் எதுவும் வைக்கவில்லை. அதனால் ெ்காள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். வேறு பொருட்கள் எதுவும் எடுத்த செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சுந்தர்ராஜ் இரணியல் போலீசுக்கும், திங்கள்சந்தை வர்த்தக நல சங்க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்நது போலீசார் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கடைக்கு வந்து பார்த்தனர்.

இதுகுறித்து சுந்தர்ராஜ் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள்சந்தை பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story