கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி


கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
x

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துக் கொண்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், அங்குள்ள வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம நபர் உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story