4 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
ஊத்தங்கரையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடைகளில் திருட முயற்சி
ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மர்ம நபர்கள் திருடும் முயற்சியை கைவிட்டு சென்று விட்டனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள எலக்ட்ரிக்கல் மற்றும் பெயிண்டு கடை ஆகியவற்றிலும் அந்த நபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் பஸ் நிலையத்தில் உள்ள குளிர்பான கடையில் மர்ம நபர்கள் காப்பர் பைப்பை திருடி சென்றனர்.
போலீசார் விசாரணை
இந்த திருட்டு சம்பவம் குறித்து கடை உரிமையாளர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடப்பதால் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.