ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
மதுரை
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 9 விவசாயிகளின் 17ஆயிரத்து 118 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த 11 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.9.21-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5.69-க்கும், சராசரியாக ரூ.8.07-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.1 லட்சத்து 38ஆயிரத்து 126 தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 8 விவசாயிகளின் 1217 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.81.40 குறைந்த பட்சமாக ரூ.55.11-க்கு சராசரியாக ரூ.73.29 ஏலம் போனது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயாவை தொடர்பு கொள்ளலாம்.
Related Tags :
Next Story