குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் ஏலம்:நாளை மறுநாள் நடக்கிறது
தேனி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் நாளை மறுநாய் ஏலம் விடப்படுகிறது.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 30 மோட்டார் சைக்கிள்கள், 1 ஆட்டோ, 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்த வாகனங்கள் தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) பார்வையிடலாம்.
வாகனங்கள் பொது ஏலம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் தேனி ஆயுதப்படை வளாகத்தில் நடக்கிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் காப்புத்தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது