வளர்ச்சி திட்டப்பணிகளை கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
x

வளர்ச்சி திட்டப்பணிகளை கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் இல.நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம், குடவாசல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி, ஒடந்துறை பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

உணவின் தரம் குறித்து ஆய்வு

தொடர்ந்து நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியின் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதையும், பாப்பையன் தோப்பு, பாலகிருஷ்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளவர் பிளாக் சாலையினையும், நீடாமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியினையும் அவர் பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகளுடன் கலந்துைரயாடல்

குடவாசல் பேரூராட்சியில் அகரஒகை காளியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையை பார்வையிட்டார். பின்னர் கொரடாச்சேரி ஒன்றியம் வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டுவரும் பாடமுறைகள் குறித்து கேட்டறிந்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி (மன்னார்குடி), சங்கீதா (திருவாரூர்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story