ஆஸ்திரேலிய ஆந்தை காயத்துடன் மீட்பு
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஆஸ்திரேலிய ஆந்தை காயத்துடன் மீட்பு
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகம் அருகில் நேற்று மதியம் அரிய வகை வெளிநாட்டு ஆந்தை ஒன்று படுகாயங்களுடன் கீழே விழுந்து பறக்க முடியாமல் தவித்தது. இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர் பாலாஜி அந்த ஆந்தையை மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
பின்னர் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆந்தையை பாலாஜி ஒப்படைத்தார். விசாரணையில் அது ஆஸ்திரேலிய நாட்டை சோ்ந்த ஆந்தை என்பது தெரியவந்தது. ஆனால் அதற்கு காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்க இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரிய வகை வெளிநாட்டு ஆந்தையை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story