தியாகதுருகம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்த அதிகாரிகள்


தியாகதுருகம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்த அதிகாரிகள்
x

தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து தியாகதுருகம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்தனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் - மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய நகரங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியாகதுருகம் அருகே கரீம்ஷாதக்கா பகுதி உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் செல்லும் சிமெண்டு குழாய்களி்ல் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. இது குறித்த செய்தி படத்துடன் கடந்த 22-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் வெளிவந்தது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் அமிர்தலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கரீம்ஷாதக்கா பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அங்கு உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தனர். இதேபோல் வடதொரசலூர் உள்பட பல்வேறு இடங்களில் உடைந்த குடிநீர் குழாயையும் சீரமைத்தனர். மொத்தம் 8 இடங்களில் குடிநீர் குழாயை அதிகாரிகள் சரி செய்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story