புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து - பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்


புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து - பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்
x
தினத்தந்தி 20 Jun 2023 9:51 AM IST (Updated: 20 Jun 2023 9:59 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம் அடைந்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பேருந்து வேகமாக வந்ததாலே இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story