மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலியானார்.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மகன் ஞானப்பிரகாசம் (வயது 26). இவர், வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரின் சிகிச்சைக்காக பணம் செலுத்த மோட்டார் சைக்கிளில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டு ெரயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்பாடியில் இருந்து கே.வி.குப்பம் நோக்கி வந்த ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த அரிபாபு, வனிதா ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஞானப்பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story