ஆட்டோ பறிமுதல்


ஆட்டோ பறிமுதல்
x

வள்ளியூரில் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர் தெற்கு:

வள்ளியூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் தெற்கு கள்ளிகுளம் தியேட்டர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மதன் (வயது 39) என்பதும், மது குடித்து விட்டு ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


Next Story