விதிகளை மீறினால் ஆட்டோ பறிமுதல்
விதிகளை மீறினால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விதிகளை மீறினால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அபராதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்வதாகவும், அதிவேகமாக செல்வதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து அதிகாரிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோ தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் 2 ஆட்டோக்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆட்டோ பறிமுதல்
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோ கூறுகையில், சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளையும், உத்தரவினையும் சரியாக பின்பற்ற வேண்டும். வேகமாக சென்றால் அல்லது அரசு உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்வது தொிய வந்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் ஆட்டோ டிரைவர்களின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.