பிளஸ்-2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது
பிளஸ்-2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி
தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தர்மபுரியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில் பிடமனேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன் தங்கள் மகளை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். அந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story