ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
வாலாஜா அருகே ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
வாலாஜா
வாலாஜாபேட்டை ராயாஜி குளக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன்.
இவரது மகன் சதீஷ் வயது (22) ஆட்டோ டிரைவர். தொழில் சரிவர அமையாததாலும் சரியான வருமானம் இல்லாததாலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் சாத்தம்பாக்கம் கிராமத்திற்கு சென்ற சதீஷ் அங்கிருந்த பெருமாள் கோவில் எதிரில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர்மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
சதீஷ் உடலை வாலாஜா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.