மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஏழுமலை நேற்று முன்தினம் இரவு நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து நாயனசெருவு நோக்கி மோட்டார் சைக்கிளில் குமார் என்பவரை உட்கார வைத்து கொண்டு சென்றார். சின்னகிரிசமுத்திரம் என்ற இடத்தில் செல்லும்போது மேம்பாலம் அமைக்க சாலையின் நடுவில் மண் குவித்து வைத்து இருந்தனர். இதனை கவனிக்காமல் ஏழுமலை மண் மீது ஏறி இறங்கி போது மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமார் லேசான காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story