சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் சாவு


சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் சாவு
x

குடிபோதையில் தொட்டிலில் ஆடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் இறந்தார். மற்றொரு சம்பவத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

குடிபோதையில் தொட்டிலில் ஆடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் இறந்தார். மற்றொரு சம்பவத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டோ டிரைவர்

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 32). ஆட்டோ டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் குழந்தைக்காக சேைலயால் கட்டப்பட்டு இருந்த தொட்டிலில் அமர்ந்து இருந்துள்ளார். குடிபோதையில் தொட்டிலில் ஆடியதால் சேலை அவரது கழுத்தை இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பீர்முகமது இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருடைய மனைவி கார்த்திகா (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக நேற்று இரவு வீட்டில் கார்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story