ஆட்டோ டிரைவர் படுகாயம்
ஆட்டோ டிரைவர் படுகாயம்
திருவாரூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடி வடக்கு தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுரு (வயது35). இவர் திருவாரூரில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு திருவாரூரிலிருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வடபாதிமங்கலத்தை அடுத்துள்ள திட்டச்சேரி என்ற இடத்தில் ஆபத்தான வளைவில் உள்ள சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த மணல் மீது மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்தது. இதில் நிலைதடுமாறி பக்கத்தில் இருந்த மின்கம்பம் மீது சிவகுரு தலை மோதியது. தலையில் படுகாயம் அடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபாதிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story