மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலி
திருமக்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு சந்தை வெளி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது37).இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவர் நேற்று ஆட்டோவில் மணக்குடிக்கு மளிகைபொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது ஆட்டோவை நிறுத்திவிட்டு ஒரு கடையில் பொருட்களை வாங்கி விட்டு ஆட்டோவிற்கு சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சவுந்தர பாண்டியன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சவுந்தர பாண்டியனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்
Related Tags :
Next Story