ஆட்டோ டிரைவர் தற்கொலை
ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி கந்தபுரம் காலனியை சேர்ந்தவர் விஜயபிரபாகரன் (வயது 39). இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு பிரிவினை சேர்ந்தவர்கள். ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த விஜயபிரபாகரன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பாத்திமா அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று காலையில் பாத்திமா வேலைக்கு சென்றார். அப்போது விஜயபிரபாகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பின்னர் இரவு 8 மணிக்கு வெளியே சென்றவர் மதுகுடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாத்திமா மற்றும் குழந்தைகள் பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டனர். பின்னர் அவர்கள் இரவு 10 மணிக்கு வீடு திரும்பியபோது விஜயபிரபாகரன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், விஜயபிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.