ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் பகுதியில் தற்போது ஏராளமான ஆட்டோக்கள் ஓடி வருகின்றன. ராமேசுவரம் பகுதியில் புதிய சி.என்.ஜி. ஆட்டோபெர்மிட் வழங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் புதிய சி.என்.ஜி. ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே உள்ள ஆட்டோக்களை நிறுத்தவே சரியான இடவசதி இல்லாத நிலையில் நகரில் அதிகமான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதால் புதிய பெர்மிட் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் அனைத்து ஆட்டோ சங்கங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஆட்டோ சங்க நிர்வாகிகள் என்.பி.செந்தில்வேல், சி.ஆர்.செந்தில்வேல், சிவாஜி, ஜீவானந்தம், சண்முகவேல், ராசு உள்ளிட்ட ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.