ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கோவிந்தன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், போக்குவரத்து விதிமீறல் என்ற பெயரில் கடுமையான அபராத கட்டண விதிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் உதயகுமார், துணைத்தலைவர் வெங்கடபதி உள்பட ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story