அதிக அபராத தொகை வசூலிப்பதாக போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
அதிக அபராத தொகை வசூலிப்பதாக போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மதுரை
மதுரை நகர் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழக அரசே அமலாக்குவதை நிறுத்த வேண்டும். கேரள அரசைப் போல் ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும். போக்குவரத்து காவல்துறை ஸ்பார்ட் பைன் விதிப்பதையும், அபராதத் தொகை அதிகமாக விதிப்பதையும் கைவிட வேண்டும். நடவடிக்கை என்ற பெயரில் ஆட்டோக்களை சிறைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் அறிவழகன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கனகவேல் கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் தெய்வராஜ் நிறைவுரையாற்றினர்.
Related Tags :
Next Story