சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம்
சேலம்,
சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடு வழங்க வேண்டும், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், 15 ஆண்டுகால ஆட்டோக்கள் காலாவதியானால், புதிய ஆட்டோ வாங்க அரசே வங்கியின் மூலம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் வெங்கடபதி, மாவட்ட பொதுச்செயலாளர் உதயகுமார் உள்பட ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story