ஆட்டோ டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கழிஞ்சூரில் ஆட்டோ டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கழிஞ்சூரில் ஆட்டோ டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆட்டோ டிரைவர் மனைவி தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி (வயது 26). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன.
ராஜேசுக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வரும் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவில் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்கொலை செய்துகொண்ட லட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்துகிறார்.