அரசு பஸ் மீது ஆட்டோ மோதல்; 3 மாணவர்கள் காயம்


அரசு பஸ் மீது ஆட்டோ மோதல்; 3 மாணவர்கள் காயம்
x

அரசு பஸ் மீது ஆட்டோ மோதல்; 3 மாணவர்கள் காயம்

திருப்பூர்

போடிப்பட்டி

பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் ஓட்டி வந்தார். அந்த பஸ் உடுமலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி அருகில் வந்தபோது மாணவிகளை இறக்கி விடுவதற்காக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது பஸ்சுக்கு பின்னால் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டா பஸ்சின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் சேதமடைந்தது. இதில் பஸ்சின் பின் பக்கக் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மைவாடி பிரிவை சேர்ந்த குமார் என்பவரது மகன் நிஷாந்த் (வயது 13), பாலப்பம்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பிரதீப் ( 13), வீரக்குமார் என்பவரது மகன் கவுசிக் ( 13) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடுமலையிலுள்ள தனியார் பள்ளி மாணவர்களான 3 பேரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Next Story