ஆட்டோ தீ வைத்து எரிப்பு?
தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்ததை தொடர்ந்து ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48). இவருடைய மனைவி தங்கேஸ்வரி. இவர்கள் 2 பேரும் சாயர்புரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி மறவன் மடம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் தப்பியோடி விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. யாரோ ஆட்டோவுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகை வைத்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே ஆட்டோ எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.