ஆட்டோவை திருடியவர் கைது
மயிலாடுதுறையில் ஆட்டோவை திருடியவர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
மயிலாடுதுறை,நவ.2-
மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஆட்டோவை சீனிவாசபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் எதிரில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராமு மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத்தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமுவின் ஆட்டோவை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.