ஆட்டோ தொழிலாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்
கையில் திருவோடு ஏந்தி ஆட்டோ தொழிலாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் திருவோடு ஏந்தி ஆட்டோ தொழிலாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ தொழிலாளர்கள்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் நெற்றியில் நாமம் போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ஆல்வின், பொருளாளர் ஏழுமலை, துணை தலைவர் லோகேஷ், துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கிளை மருத்துவமனைக்கு பஸ்கள் மூலம் நோயாளிகள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதனால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பஸ்களின் இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோவில் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் அனுமதி வழங்காமல் உள்ள தனியார் மருத்துவமனையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பிச்சை எடுத்து...
இதனையடுத்து தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் 2 ஆட்டோ தொழிலாளர்கள் சட்டை அணியாமல், நெற்றில் நாமம் போட்டுக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார் மற்றும் பொதுமக்களிடம் அவர்கள் திருவோடு ஏந்தி பிச்சை கேட்டனர். அப்போது போலீஸ்காரர்களில் ஒருவரங் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் என்பதை அறியாமல் உண்மையிலேயே பிச்சை எடுப்பவர்கள் என நினைத்து மணி பர்ஷை எடுத்து அதில் இருந்து ரூ.50 நோட்டினை திருவோட்டில் போட்டார். அதன்பரின்னரே பிச்சை எடுப்பதுபோல் வந்தவர்கள் போராட்டம் செய்த ஆட்டோ டிரைவர்கள் என்பது தெரியவந்தத. இதையடுத்து 2 ஆட்டோ டிரைவரும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.