ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மண்டித்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க மாவட்ட பொது செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின், செயலாளர் ஏழுமலை, துணை தலைவர் லோகேஷ், துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளரான மாவட்ட துணை தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், வேலூர் ஆற்காடு சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை பிரிவையும் இடமாற்றம் செய்யக்கூடாது. மாற்றப்பட்ட நோய் பிரிவுகளை இங்கேயே இயக்க வேண்டும். நோயாளிகளை அலைக்கழிக்கக்கூடாது. மருத்துவமனையை நம்பி பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் ஆட்டோ தொழிலாளர்களில் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களை அழைத்து பேசி பயண கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story