புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம்


புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம்
x

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் முக்கியமான இடங்களில் தானியங்கி எந்திரத்தில் மஞ்சப்பை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், தானியங்கி மஞ்சப்பை எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை எந்திரத்தில் இருந்து வரும். இந்த எந்திரத்தை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்த எந்திரத்தில் 300 மஞ்சப்பை வைக்கப்பட்டுள்ளது. ஒரு மஞ்சப்பையின் விலை ரூ.10 ஆகும். இதில் ஒரு ரூ.10 நாணயம் அல்லது ரூ.5 நாணயம் 2 என எவ்விதத்தில் செலுத்தினாலும் மஞ்சப்பை வரும். நாணயம் இல்லாவிட்டாலும் ரூ.10 நோட்டு செலுத்தினாலும் ஒரு மஞ்சப்பை வரும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு மஞ்சப்பை பெற்று பயனடையலாம்'' என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முருகப்பன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story