மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா


மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
x

திருமருகல் அருகே மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பூசலாங்குடியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் மகாசக்தி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story