அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில்நுங்கும் நுரையுமாக வந்த தண்ணீர் - விவசாயிகள் அச்சம்


அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில்நுங்கும் நுரையுமாக வந்த தண்ணீர் - விவசாயிகள் அச்சம்
x

அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் வந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மதுரை


அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் வந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

நுங்கும் நுரையுமாக

மதுரையில் கடந்த 2 தினங்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதன் காரணமாக கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. அவ்வாறு நிரம்பிய கண்மாய்களில் இருந்து விவசாயத்திற்காக பாசன தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட தண்ணீர் நுங்கும், நுரையுமாக காட்சியளித்தது. கண்மாய் முழுவதும் வெண்நுரையாக காட்சியளித்தது. இதை பார்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் அச்சம்

வெள்ளைக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கண்மாய் நீரில் கலந்துள்ளதால், இதுபோன்று வெள்ளை நிறத்தில் நுரை கிளம்பி வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த ரசாயன தண்ணீரால் பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும், இந்த வெண்ணிற நுரை மலைபோல் அப்பகுதி கண்மாயில் காட்சி அளிக்கிறது. இந்த நுரைகள் காற்றில் பறப்பதால் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


Next Story