விமான சாகச நிகழ்ச்சி
சூலூர் விமானப்படை பயிற்சி மையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர்
சூலூர்
சூலூரில் விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு போர் விமானங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்.சி.ஏ. தேஜஸ் இலகு ரக போர் விமானம் சூலூர் விமானப்படையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்று தேஜஸ் போர் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வானில் மிக உயரமாகவும், தாழ்வாகவும் பறந்து செய்த இந்த விமானத்தின் சாகச நிகழ்ச்சியை மாணவ-மாணவிகள் உள்பட பலரும் வியந்து பார்த்தனர். சூலூர் விமானப்படை பயிற்சி மையம், தென்னிந்தியாவின் முக்கிய பயிற்சி தளமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story