குளச்சல்-நீரோடி வரையுள்ள ஏ.வி.எம். கால்வாய் விரைவில் தூர்வாரப்படும்; கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
குளச்சல்-நீரோடி வரையுள்ள ஏ.வி.எம். கால்வாய் விரைவில் தூர்வாரப்படும் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்,
குளச்சல்-நீரோடி வரையுள்ள ஏ.வி.எம். கால்வாய் விரைவில் தூர்வாரப்படும் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
கொல்லங்கோடு மற்றும் குளச்சல் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ஏ.வி.எம். கால்வாயை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னா் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீரினை உயர்த்தும் வகையிலும் பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூர்வாரப்படும்
கடலோர பகுதி வழியாக செல்லும் ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரப்படாமல் தண்ணீர் தேங்கி நிற்பதாக விவசாயிகள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். அதன்படி நீரோடி முதல் குளச்சல் கொட்டில்பாடு பகுதி வரையில் செல்லும் ஏ.வி.எம். கால்வாயை நேரில் ஆய்வு செய்தேன்.இக்கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததால் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, அதிகமான பாசிகள் படர்ந்துள்ளது. இவற்றை தனியார் பங்களிப்புடன் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை-நிலமெடுப்பு) ரேவதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.