விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

நெல் கொள்முதல் நிலையம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா விழுதியூர், ரங்கநாதபுரம், இரும்புதலை, வனக்குடி திருப்பாலக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா-தாளடி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை ரங்கநாதபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு 2000 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.

ஆனால் நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டையில் தேங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் பனியினால் நெல் மணிகள் வீணாகும் என்பதை அறிந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நேற்று காலை தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் மற்றும் ஏராளமான விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், நாளை (திங்கட்கிழமை) கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story