விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

மருதம்பள்ளத்தில் மணல் குவாரி செயல்படுவதை கண்டித்து விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மருதம்பள்ளத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு அரசின் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மண் லாரியை மறித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார், மாவட்ட செயலர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மார்க்ஸ் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாய சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story