2 டாக்டர்களுக்கு விருது


2 டாக்டர்களுக்கு விருது
x

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 2 டாக்டர்களுக்கு விருதை தர்மபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 2 டாக்டர்களுக்கு விருதை தர்மபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்.

விருது வழங்கும் விழா

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி சிறந்த டாக்டர்களாக தேர்வு பெற்ற 2 டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.

விழாவில் சிறந்த டாக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் காது கேளாதோருக்கான சிறப்பு டாக்டர் செந்தில்குமரன், தர்மபுரி டி.என்.வி. ஆர்த்தோ கேர் மருத்துவமனையின் எலும்பு முறிவு, தண்டுவடம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் புஷ்பசேகர் ஆகியோருக்கு சிறந்த டாக்டருக்கான விருதுகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்

சேவை மனப்பான்மை

அப்போது கலெக்டர் கூறுகையில், உயிர் காக்கும் உன்னத பணிகளை மேற்கொள்ளும் டாக்டர்களின் பணி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த பணியை சிறப்பாக மேற்கொண்டு நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து உயிர் காக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டு வரும் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற உயிர்காக்கும் பணிகளை சேவை மனப்பான்மையோடு சிறப்பாக மேற்கொண்டு மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story